Tuesday, March 25, 2014

பசுமை விகடனில் எங்களின் அடுத்த பயணம்.
எங்களை மேலும் மேலும் ஊக்கிவித்திடும் பசுமை விகடனுக்கு நன்றி

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=93382


''இனி, விற்பனைக்குக் கவலையில்லை!''
விவசாயிகளே உருவாக்கிய வியாபார நிறுவனம்!
. ஜெயகுமார்
'நல்லவாயன் சம்பாதிச்சத நாறவாயன் திங்குறான்என்று கிராமங்களில் சொல்வார்கள். அது, விவசாயிகளுக்குத்தான் சரியாகப் பொருந்தும். கடன்பட்டு, கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி விளைவித்தாலும், விவசாயிகளுக்குப் பெரிய லாபம் கிடைத்துவிடுவதில்லை. அதேசமயம், அந்த விளைபொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களோ... பெரியளவில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

இது, காலகாலமாக நீடிக்கும் முரண்பாடு. அடிமட்டம் முதல் நுனிமட்டம் வரை அரசாங்கத்தில் அத்தனை பேருக்கும் இது  தெரிந்தாலும், அணு வளவும் மாற்றம் என்பதே இல்லை. இதனால், 'நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்ற விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறது... விவசாய வர்க்கம்!
இதற்கு நடுவே, 'புலம்பிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லைஎனப் புரிந்து கொண்ட தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விற்பனையையும் கையில் எடுத்து விட்டார்கள். 10.2.12-ம் தேதியிட்ட இதழில், 'ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடிஎன்ற தலைப்பில் பென்னாகரம் பகுதி விவசாயிகளைப் பற்றி எழுதியிருந்தோம். அவர்கள்தான், தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுதானிய விற்பனைக்கென்றும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றிப் பேசினார், தர்மபுரி மாவட்ட சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவலிங்கம். 'தர்மபுரி மாவட்டத்துல விளையற சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி விளையறதால நல்ல ருசியா இருக்கும். ஒரு காலத்துல மாவட்டம் முழுசும் சிறுதானியங்கள் விளைஞ்சது. இப்போ, பென்னாகரம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள்லயும், மலைப்பகுதிகள்லயும் மட்டும்தான்... சாமை, தினை, வரகு, பனிவரகு, சோளம், கேழ்வரகு, அவரை, துவரைனு சாகுபடி செய்றாங்க. மானாவாரி நிலம்கிறதால... ரசாயனமே பயன்படுத்துறது கிடையாது. ஏற்கெனவே காய்கறிகள சந்தைப்படுத்துன அனுபவத்த வெச்சுதான் இந்த உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கோம்'' என்ற சிவலிங்கம், தொடர்ந்தார்.

''50 கிராமங்களைச் சேர்ந்த, 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சு, 50 உழவர் குழுக்கள் அமைச்சுருக்கோம். ஒரு விவசாயிக்கு 1,000 ரூபாய் உறுப்பினர் கட்டணம். இதை டெபாசிட் தொகையா வரவு வெச்சுடுவோம். இதன் மூலமா 10 லட்ச ரூபாய் கிடைச்சுருக்கு. கூடவே, 'எஸ்.எஃப்..சி.' (ஷினீணீறீறீ திணீக்ஷீனீமீக்ஷீs கிரீக்ஷீவீ தீusவீஸீமீss சிஷீஸீsஷீக்ஷீtவீuனீ) மூலமா 10 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாகக் கிடைக்குது. மொத்தம் இருக்கற இந்த 20 லட்ச ரூபாய் மூலமாத்தான் கம்பெனியை நடத்தப் போறோம். விவசாயிகள் கொண்டு வர்ற தானியங்களுக்கு ரசீது போட்டு அப்பவே பணத்தைக் கொடுத்துட்டு, விற்பனைக்குப் பிறகு கிடைக்கற லாபத்தை கம்பெனி பேர்ல வரவு வெச்சுடுவோம். 5 வருஷத்துக்கு ஒரு தடவை, லாபத்தைப் பிரிச்சுக்கலாம்னு இருக்கோம்.
தானியங்கள பென்னாகரத்தில் இருக்குற ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல இருப்பு வைக்கறதுக்கும் ஏற்பாடு செஞ்சுட்டிருக்கோம். உறுப்பினர்கள் இல்லாம, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் கொள்முதல் செய்யப் போறோம். தானியங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கறதுக்காக மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுக்கான கருவிகளையும், அதுக்கான இடத்தை சொந்தமா வாங்கற திட்டமும் இருக்கு. மாவட்ட வேளாண்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் எல்லா வகையிலயும் இதுக்கு உதவி செய்றாங்க'' என்று நன்றி சொன்னார் சிவலிங்கம்.

தொடர்ந்தவர், ''சிறுதானியங்கள் பத்தி மக்கள்ட்ட விழிப்பு உணர்வு இருக்கறதால, வியாபாரிகள் சிறுதானியங்கள தேடி வந்து மொத்தமா வாங்கறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. விக்கிறதுக்கு சந்தையைத் தேட வேண்டிய அவசியம் இல்ல. நம்ம இடத்திலே இருந்தே வித்து சம்பாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. எப்பவும் 'பசுமை விகடன்எங்களோட முயற்சிகளுக்கு உறுதுணையா இருந்துட்டு இருக்கு. 2011-ம் வருஷத்துல ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் நலக் குழுவைத் தொடங்கி, பாகல், புடலை, சுரைக்காய்னு வெளைஞ்சு விற்பனை செஞ்சோம். அந்த முயற்சியை பசுமை விகடன் வெளியிட்டு கௌரவபடுத்திச்சு. அந்த உற்சாகம்தான் இப்போ சிறுதானியம் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்க வெச்சுருக்கு'' என்றார் தெம்பாக!

உற்பத்தியாளர் நிறுவனத்தின் குழுவில் இருக்கும் பனைகுளம் ஊராட்சியைச் சேர்ந்த முருகன், ''மலை கிராமங்களான எங்க பகுதியில மழைக் காலத்துல மானாவாரியா சிறுதானியங்கள விதைப்போம். அறுவடை செய்யுறதை சந்தையில வந்த விலைக்குத்தான் வித்துட்டிருந்தோம். இப்போ கம்பெனியில, உறுப்பினரா இருக்கறதால விலைக்கு ஒரு உத்தரவாதம் கிடைச்சுருக்கு. இனி, நம்பிக்கையோடு விதைப்போம்'' என்றார், மகிழ்ச்சியுடன்.
தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினரிடம் பேசியபோது, ''மத்திய அரசால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (Farmer producers company) என்ற பெயரில் தொடங்கப்பட்டது, இத்திட்டம். குறைந்தபட்சம் இதில் 1,000 விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து கம்பெனி பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்து தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்கலாம். இந்நிறுவனத்தின் மூலம் ஒரே இடத்தில் மொத்தமாக வியாபாரிகளிடம் விற்கமுடியும். விவசாயிகளே குழுவாக இருப்பதால், அவர்களுக்குள்ளே இயக்குநர், நிர்வாக இயக்குநரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழுவாக இணைந்து அவர்களே முடிவுகள் எடுப்பதால் யாரையும் ஏமாற்ற வாய்ப்பு இல்லை.

நெல், காய்கறிகள், சிறுதானியங்கள் என அந்தந்தப் பகுதியில் எந்த பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறதோ... அதற்கெனெ உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்கலாம். எஸ்.எஃப்..சி. மூலமாக ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையிடம் அணுகலாம்'' என்று சொன்னார்கள்.
 தொடர்புக்கு,சிவலிங்கம், செல்போன்: 97875-45231


Tuesday, November 19, 2013


ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்

                                                            



        
                                                                                                  பதிவு எண் ; 102/2011
                                                                                                                                                     கெளரிசெட்டிபட்டி,
                                                                                                  பிக்கம்பட்டி அஞ்சல்,
                                                                                                  பென்னாகரம் வட்டம்,
                                                                                                  தருமபுரி மாவட்டம்.


கேரளா மாநில பட்டறிவு பயணம் இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் 26-03-2012 முதல் 29-03-2012 வரை இயற்கை வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டுள்ள 50 விவசாயிகள் தருமபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் பட்டறிவு பயண்மாக கேரள மாநிலம் சென்று வந்தோம்

இந்திய இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்ஆளுவாஎன்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராய் சூரியன் அவர்களை, கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். டாக்டர் ராய் சூரியன் அவர்கள் indian organic producer company ஆரம்பித்ததின் நோக்கம் மற்றும் கேரள, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சார்ந்திராத 900 இயற்கை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு indian organic producer company நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை தரச்சான்று இந்தியாவிலேயே முதலாவதாகவும் ஆசிய கண்டத்திலேயே முதலாவதாகவும் பெற்ற பெருமைக்குறிய நிறுவனம் indian organic producer company என படவிள்க்கங்களுடன் எங்களுக்கு விளக்கி கூறினார். அவரது சந்திப்பு எங்களது ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க வள்ர்ச்சிக்கு பயனாக உள்ளது. மேலும் எங்களது செயல்பாடுகளை சிறப்பாக கொண்டு செல்ல பேருதவியாக அமைந்தது.

சந்தை தகவல் முன்னறிவிப்பு என்ற தலைப்பின் கீழ் tnau  பேராசிரியை ரோகினி அவர்கள் பட விளக்கங்களுடன் விளக்கி கூறினார்கள். அதோடு இல்லாமல் எங்களது 50 விவசாயிகளின் அலைபேசி எண்களை பெற்று விலை முன்னறிவிப்பு விபரங்களை குறுங்தகவல் மூலம் அனுப்புவதாக தெரிவித்தார்கள். இதனால் வரும் காலங்களில் விலை முன்னறிவிப்பு தகவல்கள் அறிந்து பயிற் சாகுபடி செய்திடவும், விற்பனையின் போது பயனுள்ளதாக அமையும். கடந்த காலங்களில் மஞ்சள், எள் போன்ற பயிற்களில் இதன் பயனை அனுபவ ரீதியாக உண்ர்ந்தோம்.
அடுத்து ஏற்றுமதியில் இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் பேராசியர் டக்டர்.செந்தில்குமார் அவர்கள் power point மூலம் படவிள்க்கங்களுடன் இயற்கை வேளாண்மையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து எங்களுக்கு விளக்கி கூறினார். ஏற்றுமதிக்கான வழிமுறைளை விளக்கி கூறினார்.

கோயமுத்தூர் மேட்டுப்பளையம் சாலையில் உள்ள  m g r  காய்கறி ஒட்டுமொத்த அங்காடியில் sa vegetables  நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பஷிர் அவர்களை நேரில் கண்டு காய்கறிகள் எந்த பருவத்தில் சாகுபடி செய்தால் சந்தையில் டிமாண்டு உள்ளது, விற்பனைக்கு காய்கறிகளை தரம்பிரித்து, எந்த சமயத்தில் கொண்டு வருவது எனவும், கோயமுத்தூர் கேரளா மர்க்கெட்டிற்க்கு ஏற்ற காய்கறி இரகங்கள், சகுபடி பருவம், சகுபடி முறைகள் குறித்தும் விளக்கி பழரசத்துடன் உபசரித்து விளக்கி கூறினார். அதோடில்லாமல் மார்க்கெட் முழுவதும் சுற்றிப்பார்த்து இதர வியாபாரிகளையும் சந்தித்து அவர்களது காய்கறிகளின் தேவைகளையும் கேட்டறிந்தோம். பின்னர் மதியம் கொழிஞ்சியாம்பாறை என்ற இடத்தில்  ( பாலக்கடு ) ரிலையன்ஸ் நிறுவனத்தின் இருமாநில ( தமிழ்நாடு, கேரளா ) collection centre ற்கு சென்று  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை நுகர்வோர் விரும்பும் வண்ணம் எவ்வாறு தரம்பிரித்து எந்த அளவில் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை நேரில் திரு. நாகராஜ் ரிலையன்ஸ் அதிகாரி அவர்களின் மூலம் நேரில் கண்டோம். மேலும் தரம்பிரிப்பதில் மேசை, பிளஸ்டிக் கிரேடு, பாலித்தீன் வலை பை, முதலியவற்றின் உபயோகங்கள்மற்றும் எந்தவித காய்கறிகளை எந்தவிதமான பேக்கிங்கில் கொண்டு வர வேண்டும், அறுவடை தருணம் முதலியவற்றை விள்க்கி கூறினார்.  மேலும் எங்களது இயற்கை விவசாயிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தினர் நன்கு உபசரித்து அனுப்பினார்கள். INDIAN ORGANIC PRODUCE COMPANY  விவசய குழுக்களை பலாக்காடு முதல் மன்னார்காடு செல்லும் வழியில் சந்தித்து மூன்று அடுக்கு முறையில் இயற்கை விவசாயம் செய்யும் முறைகள் குறித்தும் சாகுபடி அனுபவங்கள் நேரில் கண்டு கேரள மாநில இயற்கை விவசாயிகளின் அனுபவங்களை நேரில் கண்டு கேட்டறிந்து வந்தோம். இந்த வயல்வெளி அனுபவ பயண்ம் மிகமிக பயனுள்ளதாக இருந்தது..

இயற்கை விவசாயிகள் குழுவினர் தென்னை, வாழை, மா, சப்போட்டா, நெல்லி முதலியவற்றில் மதிப்பு கூட்டி உண்வு பதப்படுத்துதல் செய்யும்  FOOD PROCESSING INDUSTRY  யை நேரில் கண்டு பிரமிப்பு அடைந்தோம். காரணம், விவசாயிகள் தொழில் முனைவோராக உண்வு பதப்படுத்துதலில் சாதனை அடைந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் ஆகியவற்றிற்க்கு  ORGAINC CERTIFICATION னுடன் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் விற்பனை மேற்கொள்வதை நேரில் பார்த்து வந்தோம்.

மேலும் இந்தியாவிலேயே ORGANIC CERTIFICATION  முதல் முறையாக பெற்ற சான்றிதழ்களை பார்த்தோம். இது எங்கள்து குழுவினர்க்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்கியது. இது போன்று  நாங்களும் மரியாதைக்குரிய தருமபுரி மவட்ட ஆட்சியர் அவர்களின் அதரவுடன் செயல்படுத்த முடியும் என்று எங்களது மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
[

அடுத்து கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை என்ற நிறுவனத்தின் 150 ஏக்கர் மருத்துவ மூலிகை தோட்டப் பண்ணையினை நேரில் சுற்றிப்பார்த்தோம். மூலிகை சாகுபடியில் இயற்கைமுறையில் எவ்வாறு ஈடுபடுவது இயற்கை மருத்துவத்தில் மூலிகை பயிர்களின் தேவைகள் குறித்து அறிந்து கொண்டோம். இந்த பண்ணை வழி மூலிகை சாகுபடி முறைகள் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது.

மேலும் ஆளுவா ( ALUVA ) INDOCERT   என்ற இயற்கை விளைபொருள் சான்று வழங்கும் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தோம்சன் அவர்களை சந்தித்து இயற்கை தரச்சான்று பெறும் வழிமுறைகள், தனி விவசாயி, குழுவாக விவசாயிகள் சான்று பெறும் முறைகள் கட்டணம் உள்ளிட்டவைகளை  நேரில் கேட்டறிந்து வந்தோம்..
பின்னர் கொச்சி ஒட்டுமொத்த காய்கறி பழங்கள் மார்க்கெட்டை அதிகாலையில் சென்று மார்க்கெட் செயலாளர் திரு. ஜொசி அவர்களை சந்தித்தோம் அவர் கூறுகையில் செவ்வாழை, G-9  நேந்திரன், பூவன், ரஸ்தாளி போன்ற வாழை இரகங்கள் கொச்சி மார்க்கெட்க்கு விற்பனை வாய்ப்புக்ள் குறித்தும், எந்த நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டோம். முலாம்பழம், வெண்டை, தக்காளி. சாம்பார் வெள்ளரி, பாகல், பீர்க்கன், புடலை, மேலும்  GREEN LONG  கத்திரிக்காய் உள்ளிட்டவைகளின் வியாபாரவாய்ப்புகளையும் வியாபாரிகளின் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் பெற்றுவந்தோம்.
பின்னர், யூரோப் நாட்டு நிதியுதவியுடன் 46 ஏக்கரில் துவங்கப்பட்ட மருடு ஒட்டுமொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மர்க்கெட்டை நேரில் சென்று பார்த்தோம். தற்சமயம் இந்த  TERMINAL MARKET கேரளா  அரசங்கத்தின் வேளாண்மை துறையின் முலம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏலம் விடும் முறை குறித்தும் நேரில் பார்த்தோம். இந்த மார்க்கெட்டின் செயலாளர் திருமத். SHERLY  அவர்கள் எங்களை  ஒரு கூட்ட அரங்கில் அமர வைத்து கூறுகையில் இங்கு விற்பனைக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டுவரும் விவசாயிகளுக்கு 1 கிலோவிற்கு 1 ரூபாய் அதவது 5000 கிலோ கொண்டு வந்தால் 5000 ரூபாய் ஊக்கத்தொகையாக ஒரு விவசாயிக்கு தருகிறார்கள். இறக்குகூலி இலவசம், விவசாயிகள் ஓய்வெடுக்க ஓய்வு அறை, கேண்டின் வசதி லாரி வாடகையில் 1 % ஊக்கதொகையாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறார்கள். காய்கறி மற்றும் பழங்கள் ஏலம் நடத்தி ஏலபணத்தினை விவசாயினுடைய வங்கிக்கணக்கில் பணத்தை சேர்த்து விடுகிறார்கள். இந்த மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு செய்யும் சலுகைகள் எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கி விட்டது. இதுபோன்று நம் மாவட்டத்திலும் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இயற்கை விவசாயிகளுக்கு தாயுள்ளத்தோடு உதவி செய்யும் மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் கருணையோடு செயல்படுத்த வேண்டுகிறோம்.

அடுத்து எர்ணாகுளத்தில்  AVT நிறுவனத்தில் EXPORT  மையத்தை INFOTECH என்ற உலக தரம் வாய்ந்த மையத்தில் பார்வையிட்டோம். ( CSEZ- CENTRAL SPECIAL EXPORT ZONE )

இங்கு வாழை, ஜெர்பீரா, கார்னெகன், அந்தூரியம், ரோஜா, ஆர்கிடஸ் முதலிய ஏற்றுமதி பூக்கள் நாற்றுகள் உற்பத்தி செய்யும் கல்சா மையத்தையும் பபுலிவாவுஸ் மூலம் பசுமை குடில் மேற்கண்ட் பூக்கள் சாகுபடி செய்வது, விற்பனை வாய்ப்புகள், ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்து நேரில் கண்டு சில வகைகளின் நாற்றுகளை வாங்கி வந்தோம். இங்கு செல்ல பல்வேறு செக்யூரிட்டி சோதனைகளுக்கிடையில் எங்களை எல்லம் இந்த நிறுவனத்திற்கு உள்ள செல்ல வாய்ப்புகளை வனதுறை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தனர்.

அடுத்து எர்ணகுளம், காக்கநாடு என்ற இடத்தில் விவசாய சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு தலைமையகங்களுக்கு சென்றோம்.  FRUIT AND VEGETABLE PROMOTE COUNCIL KERALAL  என்ற அலுவலகத்தில் டாக்டர் அஜ்மா துணை இயக்குநர் அவர்களை சந்தித்தோம். எங்களை எல்லாம் ஒரு கூட்ட அரங்கில் உட்கார வைத்து  FVPCK  ன் செயல்பாடுகள் குறித்து கூறுகையில் கேரளா மாநிலத்தின் 7000 விவசாய சுய உதவி குழுக்கள் இயங்குவதாகவும், 170000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்தார்கள்.  இந்த விவசாய சுய உதவி குழு கூட்டமைப்பிற்கு கேரளா மாநிலத்தின் வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தலைவராகவும், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், வேளாண்மைத்துறை செயலாளர், நபார்டு சேர்மேன், NHM  இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் தலைமை பதிவாளர், நான்கு விவசாய பிரதிநிதிகள் ( இதில் ஒரு மகளிர் விவசாயி  ) ஆகியோர்களை  இயக்குநர்களாக கொண்டு செயல்படுகிறது. கம்பெனி சட்டத்தின் படி இந்த கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவசாய சுய உதவிக்குழு கூட்டமைப்பில் உள்ள ஒரு குழுவில் 20 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டின் துவக்கத்தில் ஓராண்டிற்கான பயிர் சாகுபடி குறித்து திட்டமிடுகிறார்கள். மேலும் பொருளாதார சர்வே  உட்பட அனத்து விவரங்களையும் குழு உறுப்பினர்களிடம் சேகரிக்கிறார்கள். பின்னர் இந்த 20 உறுப்பினர்களிடையே ஒரு உற்பத்தி தலைவர், ஒரு கிரிடிட் தலைவர் ஒரு விற்பனைத் தலைவர் என மூன்று நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்கள். இந்த நிர்வாகிகள் சுழற்சி அடிப்படையில் ஓராண்டு காலத்திற்குள் முறை வைத்து குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்.

உற்பத்தி தலைவர் பயிர் சாகுபடி முறைகள் குறித்து ஒவ்வொரு விவசாயிக்கும் தனி பதிவேடு பராமரித்து கண்காணிப்பார், கிரிடிட் தலைவர் ஒவ்வொரு விவசாயிக்கும் பண தேவைகள் பயிர் சாகுபடி செய்ய இருப்பின் வங்கிகளில் தொடர்பு கொண்டு பெற்று தருவார். பின்னர் கடன் பெற்ற விவசாயிகள் கடனை திரும்ப வங்கிகளில் செலுத்துகிறர்களா என்பதை கண்காணிக்கிறார்கள். விற்பனைத் தலைவர் குழு விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்யவும் தினசரி விலை விபரங்களை சேகரிப்பதும், விற்பனை மையங்களுக்கு தெரிய்ப்படுத்துவதும் இவரின் செயலாகும்.
பாலக்காட்டில் துவங்கி திருவனந்தபுரம் வரை 250 விற்பனை மையங்கள்  FVPCK  மூலம் ஏற்படுத்தியுள்ளார்கள். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை தொடர்ச்சியாக கேரளா மக்கள் வசிக்கின்ற காரணத்தினால் 10 கி. மீட்டர் சுற்றளவில் ஒரு விற்பனை மையம் உள்ளது. இந்த 10  கி. மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் தொகை, வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, விடுதிகள் முதலியவற்றை சர்வே செய்து விளை பொருட்களை இந்த விற்பனை மையத்தில் வைத்துள்ளார்கள்.

இதனால் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களின் விளைபொருள் அந்தந்த பகுதியில் உள்ள விற்பனை மையத்தில் விற்பனையாகிறது

அதோடல்லாமல் கேரளா மாநிலத்தின் 10 இடங்களில் சேகரிப்பு மையங்களை துவக்கி கூடுதலாக உள்ள விளைப் பொருட்களை இந்த இடங்களுக்கு  FVPCK  வாகனத்தின் மூலம் கொண்டு சென்று தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து அனுப்புகிறார்கள்.  170000  விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், கருவிகள், முதலியவற்றை FVPCK   வழங்குகிறது. மூன்று முதல் 5 வருவாய் கிராமங்களுக்கு FVPCK  ன் மூலம்,  B.sc Agri, Msc agri, MSW, B.A, Co-op  போன்ற பட்டதரிகளை நியமித்து ஒவ்வொரு விவசாயியையும் நேரடி கண்காணிப்பில் வைத்து ஒவ்வொரு செயலையும் பதிவேட்டில் பதிவு செய்து விவசாயின் பொருளாதாரத்தில் சுயமாக, நேர்மையாக, உற்பத்தி செய்த விளைபொருளை தானே விலை நிர்ணயம் செய்து பொருளாதார ரீதியில் மேம்பட்டு வருவது உலக அதிசங்களில் 8 வது அதிசயமாகும். இந்த அதிசயத்தை நம் தமிழகத்தில் செயல்படுத்தவும் பரிசார்த்த அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் மரியாதைக்குரிய தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும், தமிழக அரசையும் வேண்டி விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.இந்த கேரளா மநில பட்டறிவு பயணத்திற்கு ஆத்மா திட்டத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லில்லி   I A S  அவர்களுக்கும், மாவட்ட வேளண்மை துணை இயக்குனர் வணிகம் திரு. செல்வம் அவர்களுக்கும் விவசாய நலனில் அக்கறையுள்ள எங்களது தருமபுரி வேளண்மை அலுவலர் வேளாண் வணிகம் திரு தா. தாம்சன்
அவர்களுக்கும், அவர்களோடு இணைந்து பணியற்றும் உதவி வேளாண்மை அலுவலருக்கும் எங்களது விவசாயிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்றோம்.

மேலும், கேரளா மநில பட்டறிவு பயணத்திற்கு போக்குவரத்து, தங்கும் இடம், உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை சிறப்புடன்  செய்த தருமபுரி வேளாண்மை அலுவலர் வேளாண்மை வணிகம் திரு த. தம்சன் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை கூறி இந்த பட்டறிவு பயணத்தின் அனுபவங்களை  சாதனைகளாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன்  விவசாயிகளின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறறேன்.


,       


என்றும் விவசாயிகளின் நலனில்,
R சிவ்ச்லிங்கம், 
ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள்  விற்பனை குழு                      
கெளரிசெட்டிபட்டி,
பிக்கம்பட்டி அஞ்ஜல்,
பென்னகரம் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.