ஆத்மா இயற்கை
விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம்
பதிவு எண் ; 102/2011
கெளரிசெட்டிபட்டி,
பிக்கம்பட்டி
அஞ்சல்,
பென்னாகரம் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.
கேரளா மாநில
பட்டறிவு பயணம் இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்
வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் 26-03-2012 முதல் 29-03-2012 வரை இயற்கை வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டுள்ள 50 விவசாயிகள் தருமபுரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் பட்டறிவு பயண்மாக கேரள மாநிலம் சென்று வந்தோம்
இந்திய இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் ‘ஆளுவா’ என்ற இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராய் சூரியன் அவர்களை, கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். டாக்டர் ராய் சூரியன் அவர்கள் indian
organic producer company ஆரம்பித்ததின் நோக்கம் மற்றும் கேரள, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சார்ந்திராத 900 இயற்கை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு indian
organic producer company நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை தரச்சான்று இந்தியாவிலேயே முதலாவதாகவும் ஆசிய கண்டத்திலேயே முதலாவதாகவும் பெற்ற பெருமைக்குறிய நிறுவனம் indian
organic producer company என படவிள்க்கங்களுடன் எங்களுக்கு விளக்கி கூறினார். அவரது சந்திப்பு எங்களது ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க வள்ர்ச்சிக்கு பயனாக உள்ளது. மேலும் எங்களது செயல்பாடுகளை சிறப்பாக கொண்டு செல்ல பேருதவியாக அமைந்தது.
சந்தை தகவல் முன்னறிவிப்பு என்ற தலைப்பின் கீழ் tnau பேராசிரியை ரோகினி
அவர்கள் பட விளக்கங்களுடன் விளக்கி கூறினார்கள். அதோடு இல்லாமல் எங்களது 50 விவசாயிகளின் அலைபேசி எண்களை பெற்று விலை
முன்னறிவிப்பு விபரங்களை குறுங்தகவல் மூலம் அனுப்புவதாக தெரிவித்தார்கள். இதனால்
வரும் காலங்களில் விலை முன்னறிவிப்பு தகவல்கள் அறிந்து பயிற் சாகுபடி செய்திடவும்,
விற்பனையின் போது பயனுள்ளதாக அமையும். கடந்த காலங்களில் மஞ்சள், எள் போன்ற பயிற்களில்
இதன் பயனை அனுபவ ரீதியாக உண்ர்ந்தோம்.
அடுத்து ஏற்றுமதியில் இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் பேராசியர் டக்டர்.செந்தில்குமார்
அவர்கள் power point மூலம்
படவிள்க்கங்களுடன் இயற்கை வேளாண்மையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை
வாய்ப்புகள் குறித்து எங்களுக்கு விளக்கி கூறினார். ஏற்றுமதிக்கான வழிமுறைளை
விளக்கி கூறினார்.
கோயமுத்தூர் மேட்டுப்பளையம் சாலையில் உள்ள m g r காய்கறி ஒட்டுமொத்த
அங்காடியில் sa vegetables நிறுவனத்தின் உரிமையாளர் திரு. பஷிர் அவர்களை
நேரில் கண்டு காய்கறிகள் எந்த பருவத்தில் சாகுபடி செய்தால் சந்தையில் டிமாண்டு
உள்ளது, விற்பனைக்கு காய்கறிகளை தரம்பிரித்து, எந்த சமயத்தில் கொண்டு வருவது
எனவும், கோயமுத்தூர் கேரளா மர்க்கெட்டிற்க்கு ஏற்ற காய்கறி இரகங்கள், சகுபடி பருவம்,
சகுபடி முறைகள் குறித்தும் விளக்கி பழரசத்துடன் உபசரித்து விளக்கி கூறினார்.
அதோடில்லாமல்
மார்க்கெட் முழுவதும் சுற்றிப்பார்த்து இதர வியாபாரிகளையும் சந்தித்து அவர்களது
காய்கறிகளின் தேவைகளையும் கேட்டறிந்தோம். பின்னர் மதியம் கொழிஞ்சியாம்பாறை என்ற
இடத்தில் ( பாலக்கடு ) ரிலையன்ஸ்
நிறுவனத்தின் இருமாநில ( தமிழ்நாடு, கேரளா ) collection centre ற்கு சென்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காய்கறிகள் மற்றும்
பழங்களை நுகர்வோர் விரும்பும் வண்ணம் எவ்வாறு தரம்பிரித்து எந்த அளவில்
விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என்பதை நேரில் திரு. நாகராஜ் ரிலையன்ஸ் அதிகாரி
அவர்களின் மூலம் நேரில் கண்டோம். மேலும் தரம்பிரிப்பதில் மேசை, பிளஸ்டிக் கிரேடு,
பாலித்தீன் வலை பை, முதலியவற்றின் உபயோகங்கள்மற்றும் எந்தவித காய்கறிகளை
எந்தவிதமான பேக்கிங்கில் கொண்டு வர வேண்டும், அறுவடை தருணம் முதலியவற்றை விள்க்கி
கூறினார். மேலும் எங்களது இயற்கை
விவசாயிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தினர் நன்கு உபசரித்து அனுப்பினார்கள். INDIAN
ORGANIC PRODUCE COMPANY விவசய குழுக்களை பலாக்காடு முதல் மன்னார்காடு
செல்லும் வழியில் சந்தித்து மூன்று அடுக்கு முறையில் இயற்கை விவசாயம் செய்யும் முறைகள்
குறித்தும் சாகுபடி அனுபவங்கள் நேரில் கண்டு கேரள மாநில இயற்கை விவசாயிகளின்
அனுபவங்களை நேரில் கண்டு கேட்டறிந்து வந்தோம். இந்த வயல்வெளி அனுபவ பயண்ம் மிகமிக
பயனுள்ளதாக இருந்தது..
இயற்கை விவசாயிகள் குழுவினர் தென்னை, வாழை,
மா, சப்போட்டா, நெல்லி முதலியவற்றில் மதிப்பு கூட்டி உண்வு பதப்படுத்துதல்
செய்யும் FOOD PROCESSING INDUSTRY யை நேரில் கண்டு பிரமிப்பு அடைந்தோம். காரணம்,
விவசாயிகள் தொழில் முனைவோராக உண்வு பதப்படுத்துதலில் சாதனை அடைந்து அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் ஆகியவற்றிற்க்கு ORGAINC
CERTIFICATION னுடன்
கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் விற்பனை மேற்கொள்வதை நேரில் பார்த்து வந்தோம்.
மேலும் இந்தியாவிலேயே ORGANIC
CERTIFICATION முதல் முறையாக பெற்ற சான்றிதழ்களை
பார்த்தோம். இது எங்கள்து குழுவினர்க்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும்
உண்டாக்கியது. இது போன்று நாங்களும்
மரியாதைக்குரிய தருமபுரி மவட்ட ஆட்சியர் அவர்களின் அதரவுடன் செயல்படுத்த முடியும்
என்று எங்களது மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
[
அடுத்து கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை
என்ற நிறுவனத்தின் 150 ஏக்கர் மருத்துவ மூலிகை தோட்டப் பண்ணையினை நேரில் சுற்றிப்பார்த்தோம்.
மூலிகை சாகுபடியில் இயற்கைமுறையில் எவ்வாறு ஈடுபடுவது இயற்கை மருத்துவத்தில்
மூலிகை பயிர்களின் தேவைகள் குறித்து அறிந்து கொண்டோம். இந்த பண்ணை வழி மூலிகை
சாகுபடி முறைகள் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது.
மேலும் ஆளுவா ( ALUVA ) INDOCERT என்ற இயற்கை விளைபொருள் சான்று வழங்கும்
நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தோம்சன் அவர்களை சந்தித்து இயற்கை தரச்சான்று
பெறும் வழிமுறைகள், தனி விவசாயி, குழுவாக விவசாயிகள் சான்று பெறும் முறைகள்
கட்டணம் உள்ளிட்டவைகளை நேரில் கேட்டறிந்து
வந்தோம்..
பின்னர் கொச்சி ஒட்டுமொத்த காய்கறி
பழங்கள் மார்க்கெட்டை அதிகாலையில் சென்று மார்க்கெட் செயலாளர் திரு. ஜொசி அவர்களை
சந்தித்தோம் அவர் கூறுகையில் செவ்வாழை, G-9 நேந்திரன், பூவன், ரஸ்தாளி போன்ற வாழை இரகங்கள்
கொச்சி மார்க்கெட்க்கு விற்பனை வாய்ப்புக்ள் குறித்தும், எந்த நேரத்தில்
விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டோம்.
முலாம்பழம், வெண்டை, தக்காளி. சாம்பார் வெள்ளரி, பாகல், பீர்க்கன், புடலை, மேலும் GREEN LONG கத்திரிக்காய் உள்ளிட்டவைகளின் வியாபாரவாய்ப்புகளையும்
வியாபாரிகளின் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் பெற்றுவந்தோம்.
பின்னர், யூரோப் நாட்டு நிதியுதவியுடன்
46 ஏக்கரில் துவங்கப்பட்ட மருடு ஒட்டுமொத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மர்க்கெட்டை
நேரில் சென்று பார்த்தோம். தற்சமயம் இந்த TERMINAL
MARKET கேரளா அரசங்கத்தின் வேளாண்மை துறையின் முலம்
செயல்படுத்தப்படுகிறது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏலம் விடும் முறை
குறித்தும் நேரில் பார்த்தோம். இந்த மார்க்கெட்டின் செயலாளர் திருமத். SHERLY
அவர்கள் எங்களை
ஒரு கூட்ட அரங்கில் அமர வைத்து கூறுகையில் இங்கு விற்பனைக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்
கொண்டுவரும் விவசாயிகளுக்கு 1 கிலோவிற்கு 1 ரூபாய் அதவது 5000 கிலோ கொண்டு வந்தால்
5000 ரூபாய் ஊக்கத்தொகையாக ஒரு விவசாயிக்கு தருகிறார்கள். இறக்குகூலி இலவசம்,
விவசாயிகள் ஓய்வெடுக்க ஓய்வு அறை, கேண்டின் வசதி லாரி வாடகையில் 1 % ஊக்கதொகையாக
வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறார்கள். காய்கறி மற்றும் பழங்கள் ஏலம் நடத்தி
ஏலபணத்தினை விவசாயினுடைய வங்கிக்கணக்கில் பணத்தை சேர்த்து விடுகிறார்கள். இந்த
மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு செய்யும் சலுகைகள் எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தையும்,
எதிர்பார்ப்பையும் உண்டாக்கி விட்டது. இதுபோன்று நம் மாவட்டத்திலும்
மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்
என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இயற்கை விவசாயிகளுக்கு
தாயுள்ளத்தோடு உதவி செய்யும் மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் கருணையோடு செயல்படுத்த
வேண்டுகிறோம்.
அடுத்து எர்ணாகுளத்தில் AVT நிறுவனத்தில் EXPORT மையத்தை INFOTECH என்ற உலக தரம் வாய்ந்த மையத்தில்
பார்வையிட்டோம். ( CSEZ- CENTRAL SPECIAL EXPORT ZONE )
இங்கு வாழை, ஜெர்பீரா, கார்னெகன்,
அந்தூரியம், ரோஜா, ஆர்கிடஸ் முதலிய ஏற்றுமதி பூக்கள் நாற்றுகள் உற்பத்தி செய்யும்
கல்சா மையத்தையும் பபுலிவாவுஸ் மூலம் பசுமை குடில் மேற்கண்ட் பூக்கள் சாகுபடி
செய்வது, விற்பனை வாய்ப்புகள், ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்து நேரில் கண்டு
சில வகைகளின் நாற்றுகளை வாங்கி வந்தோம். இங்கு செல்ல பல்வேறு செக்யூரிட்டி
சோதனைகளுக்கிடையில் எங்களை எல்லம் இந்த நிறுவனத்திற்கு உள்ள செல்ல வாய்ப்புகளை
வனதுறை அதிகாரிகள் ஏற்படுத்தி தந்தனர்.
அடுத்து எர்ணகுளம், காக்கநாடு என்ற
இடத்தில் விவசாய சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு தலைமையகங்களுக்கு சென்றோம். FRUIT AND VEGETABLE PROMOTE COUNCIL KERALAL என்ற அலுவலகத்தில் டாக்டர் அஜ்மா துணை இயக்குநர்
அவர்களை சந்தித்தோம். எங்களை எல்லாம் ஒரு கூட்ட அரங்கில் உட்கார வைத்து FVPCK ன் செயல்பாடுகள்
குறித்து கூறுகையில் கேரளா மாநிலத்தின் 7000 விவசாய சுய உதவி குழுக்கள் இயங்குவதாகவும்,
170000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்தார்கள். இந்த
விவசாய சுய உதவி குழு கூட்டமைப்பிற்கு கேரளா மாநிலத்தின் வேளாண்மைத்துறை அமைச்சர்
அவர்கள் தலைவராகவும், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், வேளாண்மைத்துறை
செயலாளர், நபார்டு சேர்மேன், NHM இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் தலைமை
பதிவாளர், நான்கு விவசாய பிரதிநிதிகள் ( இதில்
ஒரு மகளிர் விவசாயி ) ஆகியோர்களை இயக்குநர்களாக கொண்டு செயல்படுகிறது. கம்பெனி
சட்டத்தின் படி இந்த கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவசாய சுய உதவிக்குழு கூட்டமைப்பில்
உள்ள ஒரு குழுவில் 20 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டின்
துவக்கத்தில் ஓராண்டிற்கான பயிர் சாகுபடி குறித்து திட்டமிடுகிறார்கள். மேலும்
பொருளாதார சர்வே உட்பட அனத்து
விவரங்களையும் குழு உறுப்பினர்களிடம் சேகரிக்கிறார்கள். பின்னர் இந்த 20
உறுப்பினர்களிடையே ஒரு உற்பத்தி தலைவர், ஒரு கிரிடிட் தலைவர் ஒரு விற்பனைத் தலைவர்
என மூன்று நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்கள். இந்த நிர்வாகிகள் சுழற்சி
அடிப்படையில் ஓராண்டு காலத்திற்குள் முறை வைத்து குழு உறுப்பினர்கள் அனைவரும்
வந்துவிடுவார்கள்.
உற்பத்தி தலைவர் பயிர் சாகுபடி முறைகள்
குறித்து ஒவ்வொரு விவசாயிக்கும் தனி பதிவேடு பராமரித்து கண்காணிப்பார், கிரிடிட்
தலைவர் ஒவ்வொரு விவசாயிக்கும் பண தேவைகள் பயிர் சாகுபடி செய்ய இருப்பின்
வங்கிகளில் தொடர்பு கொண்டு பெற்று தருவார். பின்னர் கடன் பெற்ற விவசாயிகள் கடனை திரும்ப
வங்கிகளில் செலுத்துகிறர்களா என்பதை கண்காணிக்கிறார்கள். விற்பனைத் தலைவர் குழு
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்யவும் தினசரி விலை விபரங்களை
சேகரிப்பதும், விற்பனை மையங்களுக்கு தெரிய்ப்படுத்துவதும் இவரின் செயலாகும்.
பாலக்காட்டில் துவங்கி திருவனந்தபுரம்
வரை 250 விற்பனை மையங்கள் FVPCK மூலம் ஏற்படுத்தியுள்ளார்கள்.
பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை தொடர்ச்சியாக கேரளா மக்கள் வசிக்கின்ற
காரணத்தினால் 10 கி. மீட்டர் சுற்றளவில் ஒரு விற்பனை மையம் உள்ளது. இந்த 10 கி. மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் தொகை,
வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, விடுதிகள் முதலியவற்றை சர்வே செய்து விளை
பொருட்களை இந்த விற்பனை மையத்தில் வைத்துள்ளார்கள்.
இதனால் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவி
குழுக்களின் விளைபொருள் அந்தந்த பகுதியில் உள்ள விற்பனை மையத்தில் விற்பனையாகிறது
அதோடல்லாமல் கேரளா மாநிலத்தின் 10
இடங்களில் சேகரிப்பு மையங்களை துவக்கி கூடுதலாக உள்ள விளைப் பொருட்களை இந்த
இடங்களுக்கு FVPCK வாகனத்தின் மூலம் கொண்டு சென்று தேவைப்படும்
இடங்களுக்கு பிரித்து அனுப்புகிறார்கள். 170000
விவசாயிகளுக்கு தேவையான விதைகள்,
உரங்கள், கருவிகள், முதலியவற்றை FVPCK வழங்குகிறது. மூன்று முதல் 5 வருவாய் கிராமங்களுக்கு FVPCK ன் மூலம், B.sc Agri, Msc agri, MSW, B.A, Co-op போன்ற பட்டதரிகளை நியமித்து ஒவ்வொரு
விவசாயியையும் நேரடி கண்காணிப்பில் வைத்து ஒவ்வொரு செயலையும் பதிவேட்டில் பதிவு
செய்து விவசாயின் பொருளாதாரத்தில் சுயமாக, நேர்மையாக, உற்பத்தி செய்த விளைபொருளை
தானே விலை நிர்ணயம் செய்து பொருளாதார ரீதியில் மேம்பட்டு வருவது உலக அதிசங்களில் 8
வது அதிசயமாகும். இந்த அதிசயத்தை நம் தமிழகத்தில் செயல்படுத்தவும் பரிசார்த்த
அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் மரியாதைக்குரிய
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களையும், தமிழக அரசையும் வேண்டி விவசாயிகளின்
சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.இந்த கேரளா மநில பட்டறிவு பயணத்திற்கு ஆத்மா
திட்டத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்று நிதி ஒதுக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி லில்லி I A S அவர்களுக்கும், மாவட்ட
வேளண்மை துணை இயக்குனர் வணிகம் திரு. செல்வம் அவர்களுக்கும் விவசாய நலனில்
அக்கறையுள்ள எங்களது தருமபுரி வேளண்மை அலுவலர் வேளாண் வணிகம் திரு தா. தாம்சன்
அவர்களுக்கும், அவர்களோடு இணைந்து பணியற்றும்
உதவி வேளாண்மை அலுவலருக்கும் எங்களது விவசாயிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்றோம்.
மேலும், கேரளா மநில பட்டறிவு
பயணத்திற்கு போக்குவரத்து, தங்கும் இடம், உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை சிறப்புடன் செய்த தருமபுரி வேளாண்மை அலுவலர் வேளாண்மை வணிகம்
திரு த. தம்சன் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை கூறி இந்த பட்டறிவு பயணத்தின்
அனுபவங்களை சாதனைகளாக மாற்ற உறுதி
பூண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன்
விவசாயிகளின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறறேன்.
,
என்றும் விவசாயிகளின் நலனில்,
R சிவ்ச்லிங்கம்,
ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் விற்பனை குழு
கெளரிசெட்டிபட்டி,
பிக்கம்பட்டி அஞ்ஜல்,
பென்னகரம் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.
0 comments:
Post a Comment